திருத்துறைப்பூண்டி : அரசு பேருந்தை சுற்றி வளைத்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரண்டு பேருந்துகள் திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்கிறது.

இதனால், திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட கோவிலுக்கு செல்வதற்கு இந்த இரண்டு பேருந்துகளை தான் நம்பி உள்ளனர். ஆனால், இந்த பேருந்துகள் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திற்குள் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். 

இதனால் பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருத்துறைப்பூண்டி பேருந்து  நிலையத்திற்குள் வரும் என்று உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tiruthuraipoondi public peoples stop govt bus


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->