சுவற்றில் ஓட்டை போட்டு ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சதாசிவம் என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சதாசிவம் கடையைப் பார்த்தார். அதன் பிறகு, தூசி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தலைமை காவலர் குமார், துணை தலைமை காவலர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

அப்போது, நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thiruvannamalai liquor sales store hole robbed


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->