திருவள்ளூர் : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி.! நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்.! - Seithipunal
Seithipunal


சரக்குகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது. 

இதைப்பார்த்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திசை திருப்பியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கீழே தொங்கியது. 

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, ராட்சத ஏணியின் மூலம் லாரியிலிருந்து ஓட்டுனர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். அதன் பின்னர், லாரியை தூக்குவதற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு மேம்பாலத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரியை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thiruvallur containar lorry accident in kosasthalai bridge


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->