பள்ளி சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி போதை பொருள் கொடுத்த மூன்று வாலிபர்கள் - வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் குட்கா வகை போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சட்ட விரோதமாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழக அரசின் நடவடிக்கையால் அவ்வப்பொழுது தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழக அரசால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவனுக்கு, சில வாலிபர்கள் ஒன்றாக சேர்ந்து ஹான்ஸ் எனப்படும் போதை பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். 

இதுகுறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், நாகல் குளத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் சேர்ந்து, அந்த சிறுவனுக்கு போதை மருந்தை வழங்கியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thenkasi three young mans compal drugs gave to school student


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal