பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் - போக்ஸோவில் கைது.!
near thenkasi teacher arrested for obscenely talk to students
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணியன்.

இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாகவும், பல அர்த்தங்களில் பேசி வருவதாகவும் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், பள்ளி நிர்வாகம் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், அதனை கண்டு கொள்ளாமலும் இருந்ததாக தெரிவித்து நேற்று முன்தினம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளியில் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும் என்றும் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் படி, போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகமும் அவரை இஅடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், போலீசார் பாலசுப்பிரமணியனிடம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near thenkasi teacher arrested for obscenely talk to students