வார இறுதியில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள்...! எத்தனை தெரியுமா?
Additional special buses on weekends Do you know how many
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தற்போது செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது,"சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோவில், சேலம், ஈரோடு,கன்னியாகுமரி, கும்பகோணம், மதுரை, தூத்துக்குடி, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பேருந்துகளும்,சனிக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பேருந்துகளும் என மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Additional special buses on weekends Do you know how many