தென்காசி : தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை - தலைமறைவான தம்பதி.! நடந்தது என்ன?
near thenkasi girl fell down after died
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அண்ணாநகர் மூன்றாவது தெருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, சென்னை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்து, ஒரு தம்பதியினர், குழந்தையுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அதே பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில், குழந்தை வீட்டு சுவரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததாக கூறி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31-ந்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தை கடந்த 4 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், குழந்தை இறப்பதற்கு முந்தைய நாளான 3-ந்தேதி மாலை குழந்தையின் பெற்றோர் என்று கூறி வந்த தம்பதி தலைமறைவாகினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தலைமறைவான இரண்டு பேரும் குழந்தையின் உண்மையான பெற்றோர் தானா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதற்கிடையே குழந்தையின் உண்மையான தந்தையான பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை பெற்று அடக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து திலீப் குமாரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தியதில், "ஹேமலதாவுக்கும், அவருக்கும் திருமணமாகி சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
English Summary
near thenkasi girl fell down after died