தென்காசி : அரசு பேருந்தில் பயணம் செய்த நபர் வழியில் உயிரிழந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி அருகே டி.என்.புதுக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாதுஷா. இவர் கேரளா மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு கேரளா மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக புறப்பட்ட கேரளா அரசு பேருந்தில் ஏறினார். 

இந்த பேருந்து இன்று அதிகாலை தென்காசி பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. இதையடுத்து, பேருந்தில் உள்ள அணைத்து பயணிகளும் பேருந்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், பாதுஷா மட்டும் இறங்கவில்லை. 

இதைப்பார்த்த பேருந்து நடத்துனர் பாதுஷாவை எழுப்புவதற்கு முயன்றுள்ளார். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி பேருந்து நிலையத்திற்கு செவிலியருடன் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. 

அதன் பின்னர் அங்கு வந்த செவிலியர் பாதுஷாவை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tenkaasi bus stand man died in bus


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal