தாலி கட்டிய அடுத்த நொடியில் மணமகன் செய்த வேலை!. நெகிழ்ச்சியில் உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் ராஜேஷ் டிப்ளமோ படித்த இவர் தனியாக சிறு தொழிற்சாலை ஒன்று நடத்தி வருகிறார்.

இவர் அப்பகுதியில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் உள்ள ரத்த தான கழகத்தில் இணைந்து 15-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானமும் செய்துள்ளார்.

இதையடுத்து, அணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் மகள் உமாமகேஸ்வரி டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். நேற்று இவருக்கும் ராஜேஷுக்கும் சேந்தங்குடி மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் அடுத்த சில நிமிடத்தில் மணமகன் ராஜேஷ் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். 

இதுகுறித்து ராஜேஷ் தெரிவித்ததாவது, "எனது உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து எனது மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன். அவர் செவிலியர் என்பதால் உயிர் பிழைப்பதற்கு உடல் உறுப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டார்.

அதன் பின்னர், முதலில் கண் தானம் செய்வதற்கு இணையத்தில் பதிவு செய்துள்ளேன். விபத்துகளில் பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறோம். அது போன்று நடக்கக் கூடாது. எல்லோரும் உயிருடன் இருக்கும் வரை ரத்த தானம் இறக்கும் நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்றுத் தெரிவித்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவுகள் அனைவரும் ராஜேஷின் இந்த செயலைப் பார்த்து நெகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்குத் தென்னங்கன்றுகளை பரிசாக வழங்கினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near putukottai new marriege couple apply for argon donate


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->