பெரம்பலூர் : பள்ளி மாணவிக்கு ஆசைவார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய ஒப்பந்த தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலக்கன். இவர் தனியார் சக்கரத் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். 

இவருக்கும் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் செல்போனில் மணிக்கணக்கில் பேசி காதலை மேலும் வளர்த்து வந்துள்ளனர். 

இதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமலக்கன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கூடிய சீக்கிரம் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிப்போட்டு, பலமுறை உல்லாசமும் அனுபவித்துள்ளார். 

இதன் காரணமாக மாணவியின் உடல் நிலையில் மாற்றமும், அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியின் பெற்றோர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரணை செய்ததில், அவர் அனைத்தையும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து, மாணவயிடம் ஆசை வார்த்தைகளைத் தெரிவித்து, அவரை கர்ப்பமாக்கிய ராமலக்கனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்றும் தலைமை காவலர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near perambalur man arrested for school student sexual harassment case


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal