சட்டவிரோதமாக விற்பனையாகும் மதுபானங்கள் - கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மதுபானக் கடைகளில் மதியம் பன்னிரண்டு மணி முதல் இரவு பத்து மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இரவு பத்து மணியிலிருந்து மறுநாள் மதியம் பன்னிரண்டு மணிவரை அரசு மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார் நடத்துபவர்களும் மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி ஈசன்ய தெருவில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் அருகே இரவு பகல் என்று 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அங்கு மது அருந்தும் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.  

இந்த வீடியோவைப் பார்த்த அப்பகுதி மக்கள் "சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றுத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை நகரத்தின் சில பிரதான தெருக்களில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்ற பகுதிகளான கூறைநாடு மாமரத்து மேடை மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மகாதான தெருக்களிலேயே அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. 

அதிலும் குறிப்பாகக் கூறைநாடு மாமரத்து மேடை பகுதியில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளில் மதுவை வாங்கிவிட்டு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்து குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்து தூங்குகின்றனர். இந்த நிலையைப் பார்த்து  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அச்சத்துடன் பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மது அருந்துவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near mayiladuthurai liquor items unofficial sales


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->