நெற்பயிர்கள் மட்டுமல்லாது மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்.! - Seithipunal
Seithipunal


இன்று த.மா.க கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் உயிரிழந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு  நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது, "கடந்த மாதத்திலிருந்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். இதையடுத்து, தமிழகத்தில், வருகிற 19-ந்தேதி முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில், தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக குடியிருப்புகளில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். மழையால், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் மட்டுமின்றி வாழை, தென்னை, மானாவாரி பயிர்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால், அதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கும் உரிய நிவாரணம் தர வேண்டும்.

தற்போது தமிழக அரசு, குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் ரேசன்கார்டுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal tmk partie leader gk vaasan press meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->