100 நாள் வேலை.. ஆனால் ஒரு நாள் கூட வேலை தரவில்லை - ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்.!
near dharmapuri village peoples petition for hundrad days work
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்தன் கொட்டாய் கிராமம் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
"எங்கள் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை. இதுகுறித்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவிதமான பலனும் இல்லை.
இந்த ஆண்டு முடிவதற்குள் எங்களுக்கு 100 நாள் வேலையும் வழங்க முடியாது. ஆகவே, எங்களுக்கு வேலையில்லா படி வழங்கவும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்கள்.
இதேபோன்று, பாலக்கோடு அருகேயுள்ள சங்கம்பட்டி கிராம மக்களும் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவில், சேலம்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்பட்டி பகுதியில் சுரங்க பாதை மற்றும் பக்க சாலை அமைக்க வேண்டும்.
ஏனென்றால், இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், ரேஷன் கடை, சுடுகாடு மற்றும் பள்ளிக்கு செல்வைத்து என்று இந்த ஆறு வழி சாலையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அப்படி இல்லையென்றால் புலிக்கரை அல்லது அல்லியூர் வழியாக இரண்டு கிலோ மீட்டருக்கு சுற்றி செல்லவேண்டி உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
near dharmapuri village peoples petition for hundrad days work