பாஜக வன்முறையை தூண்டி குளிர்காய நினைக்கிறது - திருமாளவன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தமிழக பாஜகவினரும் ஆளுநரும் செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் எனும் போது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. 

அவர் தமிழகத்தின் ஆளுநர் என்பதை மறந்து ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே செயல்படுகிறார். அரசு விழாக்களில் எல்லாம் அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதத்தைப் பேசுகிறார். திமுக அரசிற்கு எதிரான அவதூறுகளைப் பரப்புகிறார். தமிழகத்தில் பாஜக வடமாநிலங்களைப் போல வன்முறையைத் தூண்டி குளிர்காய நினைக்கின்றது.

இதையடுத்து, இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படையே சுட்டது, இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழக உரிமைகள் பறிக்கப்படுவது என்று மூன்று பிரச்சனைகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore thirumavalavan press meet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->