அவர் ஒரு அரசியல் கோமாளி.. ஒரு கட்சித் தலைவர் என்ன செய்யவேண்டும்? - ஆவேசத்தில் செந்தில் பாலாஜி.! - Seithipunal
Seithipunal


கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பிறகு ராமநாதபுரத்தில் 80 அடி சாலையில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளையும் துவக்கி வைத்தார். 

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கார் வெடிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்து தொழில் முனைவோர் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதில், பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது. இவ்வழக்கை  கோவை காவல்துறையினர் மிகத் திறமையாக கையாண்டுள்ளனர். 

இதையடுத்து பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தெரியாமல் எவ்வாறு பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான முறையில் வழிநடத்தும் தலைவர் என்றால், ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள்? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்ன்று கூறுவது முறையானது அல்ல. முதலில் அக்கட்சியினர் ஒரு முடிவுக்கு வரவேண்டும். 

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி பற்றிய எந்தவிதமான கேள்விகளையும் என்னிடம் கேடக்காதீர்கள். கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என்று எப்படி சொல்லமுடியும்? கட்சித் தலைவர் என்ன செய்யவேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி, பந்தை ரத்து செய்யுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

மேலும், ஒரு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத ஒன்று. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near covai minister senthil balaji press meet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->