கோவை : வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்த்தில் உள்ள சூலூர் அருகே சந்தம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் பஞ்சலிங்கம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கும் இடையே கடந்த 22ம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு குறித்து ஜெயப்பிரகாஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, இருதரப்பினரிடையே விசாரணை நடத்திய போலீசார் பஞ்சலிங்கத்திடம் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் உங்களை காப்பாற்றி உள்ளேன். இதற்காக எனக்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பஞ்சலிங்கம் நாளைக்கு பணம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் மறுநாள் காலையில் பஞ்சலிங்கத்தை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது பஞ்சலிங்கம் தன்னிடம் நான்கு ஆயிரம் தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் தனக்கு ஐந்தாயிரம் தன வேண்டும் என்றுள்ளார்.

இது தொடர்பாக பஞ்சலிங்கம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சலிங்கத்திடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து பஞ்சலிங்கம் அந்த பணத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளார். 

அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் அதிகாரியை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் அதிகாரியின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore police officer arrested for bribe


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->