மதுபோதையில், சைவ ஓட்டலில் சிக்கன் ரைஸ் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த இரண்டு போலீசார் சாதாரண உடையில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றுள்ளனர். 

அப்போது, சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம். இங்கு அசைவ உணவு கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சில நிமிடத்தில் இந்த வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆயுதப்படை போலீசார் கடை ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி விரைந்து வந்த போலீசார் சண்டையை தடுத்து நிறுத்தி ஆயுதப்படை போலீசாரை அழைத்துச் சென்றனர். 

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ கட்சி வைரலாகி பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai two police officers fight vedge hotel employee for chicken rice


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->