பாலியல் புகாரில் தாளாளர் கைது.! பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருநின்றவூரில் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 

அந்த புகாரில், "பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி தாளாளர் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் போர்களமாகக் காட்சி அளித்தது. 

இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் மூன்று காவல் உதவி ஆணையர்கள், நான்கு ஆய்வாளர்கள், பத்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெறும் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai private school Secretary arrested for sexuall harassment


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal