அரசு பேருந்தில் கல்லூரி மாணவனைத் தாக்கிய இதர கல்லூரி மானவர்கள் - 9 பேர் கைது.!
near chennai college students fight in government bus
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் ரிஸ்வான் என்ற மாணவர் மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இதர கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் அந்த பேருந்தில் பயணம் செய்தார்கள்.

அப்போது அவர்கள் திடீரென மாணவர் ரிஸ்வானை பேருந்தில் வைத்தே சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மாணவர் ரிஷிவானின் கல்லூரி அடையாள அட்டையை பிடுங்கி கொண்டு பேருந்தை விட்டு இறக்கி விட்டனர். இந்த தாக்குதலில் மாணவர் ரிஸ்வான் படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த மாணவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த மாணவர் சிகிச்சை பெற்று பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ரிஸ்வானை தாக்கிய இதர கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேரை நேற்று கைது செய்தனர். அதன் பின்னர் அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், 'ரூட் தல' பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்தது.
English Summary
near chennai college students fight in government bus