ஈரோடு : கடனால் இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்ட ஆம்புலன் ஓட்டுனர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி கீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். நாளடைவில், கடன் தொல்லை அதிகரித்ததால் அதனை திருப்பி செலுத்த முடியாமல் மனா உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் சென்னியப்பன் கடந்த 19-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

ஆனால் சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்தியூர் காவல்நிலையத்தில் துணை காவலர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near anthiyur ambulance driver died for loan increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->