தேசிய கைத்தறி நாள் விழா..பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தேசிய கைத்தறி நாள் விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். 


இன்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது.இவ்விழாவில் கைத்தறி நெசவாளர்களால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட தூய பட்டு தூய சரிகை கைத்தறி இரகங்களும், திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தூய பட்டு, பருத்தி, கோரா மற்றும் சில்க் காட்டன் சேலைகள்,  ஜவுளி இரகங்கள் கண்கவரும் வகையில் காண்காட்சி படுத்தப்பட்டிருந்தது.

இதனை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.பின்னர்  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு மேம்படுத்தப்பட்ட மின் வணிக தளத்தை (Revamped Co-optex e-commerce Website) தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட இரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையில், 60 விருதாளர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.


மேலும், நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 25 பயனாளிகளுக்கு பணப்பலன் ஆணைக, 24 பயளாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,200/- வீதம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் காலஞ்சென்ற நெசவாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1,200/- வீதம் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைக, கைத்தறி நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடிக்கான கடனுதவி ஆணை, 20 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பிலான தறி உபகரணங்களையும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.


இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில் நெசவு மேற்பார்வையாளராகப் பணிபுரிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும்,வழங்கினார்.இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் முன்னிலையில்,  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Handloom Day celebration Udhayanidhi Stalin provided various welfare scheme assistance


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->