#BREAKING: வேங்கைவயல் விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இறையூர் வேங்கைவயலில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்தது தொடர்பான வழக்கில் இதுவரை 85 சாட்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வேங்கைவையில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரும் வேங்கைவயல் நீர்த்தக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Commission for Scheduled Castes send clarification notice on vengaivyal issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->