தமிழகத்தில் ஒரே மாதிரியான தொடர் கொலை! உயர்நீதிமன்ற மதுரை கடும் அதிருப்தி!
namakkal pannai veedu old people murder chennai hc condemn
தமிழகத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த பொது நல மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கியக் கருத்து வெளியிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், “முதியோர்களை பொது இடங்களில் தனியாக விட்டுவிடும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
இதனால் அவர்கள் உடல்நலம் பாதித்து சிரமம் அனுபவிக்கிறார்கள். தேசிய முதியோர் மையங்களை அமைக்க வழிகாட்டுதல்கள் இருந்தும், எந்த மாவட்டத்திலும் அவை செயல்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “முதியோர்களை இலக்காகக் கொண்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பது கவலிக்கிடமானது. அவர்களுக்கான மையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை. முதியோர்களை பாதுகாப்பது அரசின் நேரடி கடமை” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞர், “நிதி வழங்குவது மத்திய அரசின் பங்கு; மையங்களை அமைப்பது மாநில அரசின் கடமை” என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “வழங்கப்படும் நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது மத்திய அரசின் பொறுப்பு அல்லவா?” என கேள்வியெழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், மத்திய சமூக நீதி மற்றும் தமிழக சமூக நலத்துறை முதன்மைச் செயலர்களை வழக்கில் சேர்த்துவிட்டு, தேசிய முதியோர் மையங்களுக்கான நடவடிக்கைகள் குறித்து இரு அரசுகளும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
namakkal pannai veedu old people murder chennai hc condemn