வருங்கால மனைவிக்காக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் பொறியாளர்; வெறும் 23 ஆயிரம் ரூபாய்க்கா..?
Namakkal engineer buys 1 acre of land on the moon for his future wife
நாமக்கல்லைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்காக நிலாவில் நிலம் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் அசோக் சரவணன் என்ற பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும் வரும் 17ஆம் தேதி திருமணம் நடைபெஉள்ளது.
இந்நிலையில், வருங்கால மனைவிக்காக சிறப்பு பரிசு அளிக்க திட்டமிட்ட அசோக் சரவணன், சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நிலாவில் நிலம் வாங்க விண்ணப்பித்துள்ளார். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 23 ஆயிரம் ரூபாய் செலுத்திய அவர், அதற்கான ஆவணங்களையும் தனியார் நிறுவனத்திடம் பெற்றுள்ளார்.
இருப்பினும், 1967-ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), நிலவில் எந்தவொரு தனிநபரோ அல்லது நாடுகளோ சொந்தமாக நிலம் வாங்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.
எனவே, வணிக நிறுவனங்கள் வழங்கும் இதுபோன்ற சான்றிதழ்கள் வெறும் "அன்பளிப்பு ஆவணமாக மட்டுமே" கருதப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அன்பானவர்களுக்கு ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான பரிசைக் கொடுத்து மகிழ்வதற்காகக் கொடுக்கப்படும் 'நினைவுச் சான்றிதழ்' மட்டுமே தவிர, இதற்கு எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Namakkal engineer buys 1 acre of land on the moon for his future wife