தமிழக வரலாற்றில் முதல்முறை; சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் சபாநாயகர்; எம்.எல்.ஏ. சத்யபாமா நெகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட்-05-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அவையை ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அடுத்ததாக துணை சபாநாயகராக ரவிசங்கரும் அவ்வப்போது நடத்தி வருகிறார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கர் இருவரும் சட்டப்பேரவையில் இல்லாத நேரத்தில் இன்று அவையை தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா வழி நடத்தினார்.

இன்று கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று போது, சட்டப்பேரவை சபாநாயகரும், துணை சபாநாயகரும் தற்காலிகமாக அவையில் இல்லை. இதையடுத்து, திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சத்தியபாமா, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகராக சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து 15 நிமிடங்கள் சட்டப்பேரவையை வழிநடத்தினார்.

இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு உள்ளே வாழ்த்து தெரிவித்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்த பிறகு சத்யபாமா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க சபாநாயகர் இருக்கையில் அமரும்போது சிறு பதற்றம் இருந்ததாகவும், இருந்தபோதிலும் அது மகிழ்ச்சி அளித்ததாகவும், வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

அத்துடன், இதை தமிழ்நாட்டின் பெண்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் அனைத்தும் சாத்தியம், அனைத்தும் வளர்ச்சி என்று இருக்கும் எனவும் மேலும், தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interview with MLA Sathyabhama the first woman speaker to lead the Legislative Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->