போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்; மதுரவாயலில் தேடுதல் வேட்டை; 4 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 3 பேர்..!
3 people arrested in Maduravoyal for carrying 4000 drug pills
மதுரவாயல் பகுதியில் 04 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்பேடு காவல் மாவட்ட துணை கண்காணிப்பு குழு போலீசாருக்கு மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார், மதுரவாயல், தி.நகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 03 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 04 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணையில், அவர்கள் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பாவேஷ் (23), கண்ணம்மாபேட்டை தினேஷ் (22), எஸ்பி கார்டன் பகுதியை சேர்ந்த சஞ்சய் (21) என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், பணம் மற்றும் 03 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், இவர்கள் எங்கிருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்தார்கள், இவர்களுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, யார், யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 03 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
3 people arrested in Maduravoyal for carrying 4000 drug pills