நாகை: மின்னல் தாக்கி மாணவன் பலி!
nakapattinam lightning student death
நாகை மாவட்டம், கீழையூரில் மின்னல் தாக்கியதில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 12) மாலை கீழையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அந்த நேரத்தில் கீழையூர் கீழத்தெருவைச் சேர்ந்த தீபராஜ் என்ற 13 வயது சிறுவன் வீட்டின் மொட்டைமாடியில் நின்றிருந்தார். திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் தீபராஜ் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மின்னல் தாக்கிய தாக்கம் கடுமையாக இருந்ததால், பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீபராஜ் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் கீழையூர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழையூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
nakapattinam lightning student death