படுகாயங்களுடன் கரைத்திரும்பிய மீனவர்கள்! நடுக்கடலில் நடைபெறும் கொடூர சம்பவங்கள்!
Nagapattinnam fishermen serious injuries
நாகப்பட்டினம், செருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. கடந்த 21ம் தேதி இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவருடைய மகன்கள் உட்பட 4 பேர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 அதிவேக படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகப்பட்டினம் மீனவர்ளிகடம் கத்தியை காட்டி மிரட்டி மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறிவால் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

பின்னர் நாகை மீனவர்களிடம் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜி.பி.எஸ் கருவி செல்ஃபோன் போன்றவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
படுகாயங்களுடன் கரைத்திரும்பிய மீனவர்களை சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் போலீசார் இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Nagapattinnam fishermen serious injuries