தூத்துக்குடியில் பரபரப்பு! பாலத்தின் கீழ் மர்ம சடலம்! மது போதையில் தவறி விழுந்தாரா..? - தொழிலாளி உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ் கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்பாகம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சாக்கடை நீரில் சிக்கியிருந்த அந்த சடலத்தை மீட்க, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள், சடலத்தை மீட்டு வெளிக்கொண்டுவந்தனர்.

தொடர்ந்து காவலர்கள் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜீவ்நகர் 5வது தெருவைச் சேர்ந்த செல்வம் (45) என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் எப்.சி.ஐ. கிடங்கில் மூடை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் என தெரியவந்தது.

முன்னதாக, சம்பவம் நடந்த தினம் இரவு வேலை முடித்துவிட்டு பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது போதை அதிகரித்து நிலைதடுமாறிய அவர், தவறி அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mysterious body under bridge Did he fall while drunk Worker dies


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->