சாத்தான்குளத்தில் கொலை! காவலர் கணவரை அரிவாளால் வெட்டிய அதிபயங்கர சம்பவம் ...! நடந்தது என்ன...?
Murder Satankulam Horrific incident where policeman hacked his husband death sickle What happened
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மெட்டில்டா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (வயது 54) கடந்த 3-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் அருகே புதிய நிலத்தை பார்வையிட சென்றபோது, அருகே வசிக்கும் நில உரிமையாளர் ஆபிரகாம் மகன் ஜேக்கப் அவருடன் முந்தைய சர்ச்சைக்கு காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த ஜேக்கப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜேம்ஸ் சித்தர் செல்வனை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினார். சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேக்கப்பை தேடும் பணியில் 3 தனிப்படைகளை அமைத்தனர்.
மேலும், புத்தன்தருவை காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜேக்கப் கடந்த 4-ம் தேதி இரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Murder Satankulam Horrific incident where policeman hacked his husband death sickle What happened