மதுபோதை கணவன்.. மனைவியிடம் அத்துமீறல்.! துடிதுடித்து பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே மடத்துப்பட்டியை சேர்ந்த முத்துராஜ், என்பவர் உணவகத்தில் மாஸ்டராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

அதுபோல வரு ஊருக்கு வரும் போதெல்லாம் வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி தான் வருவாராம், வந்தவுடன் தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி அவரது மனைவி தனலட்சுமியுடன் கடுமையான சண்டை போடுவார் என்று கூறப்படுகின்றது.

இதுபோல கடந்த 22ம் தேதி வீட்டில் சண்டை ஏற்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து மறுநாள் காலை பலத்த காயங்களுடன் அவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்டதில் தனலட்சுமி சிக்க அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அப்போது தனலட்சிம்," சம்பவ தினத்தில் குடித்துவிட்டு வந்து சண்டையிட்ட போது என் தம்பியுடன் என்னை சேர்த்து தகாத வார்த்தைகளை கொண்டு  கேவலமாக பேசியதால் ஆத்திரத்தில் நானும், என் தம்பியும் சேர்ந்து கம்பியால் அடித்ததில் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனலட்சுமியையும், அவரது தம்பியையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in sivakasi madathupatti


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal