தகாத உறவு.. தலைக்கேறிய போதை.. அரங்கேறிய துயரம்.! திட்டக்குடி அருகே பயங்கரம்.!
MURDER IN CUDDALURE TITTAGUDI
கடலூர் திட்டக்குடி அருகே மர்மமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் அவருடைய அண்ணன் மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வையங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், கடந்த 26ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டனின் அண்ணன் மனைவி காசியம்மாள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காசியம்மாளின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடைய கணவனின் தம்பியான மணிகண்டனுக்கும், காசியம்மாளுக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவதினத்தில் போதையில் இருந்த காசியம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. அப்போது, உறவினர் மகனான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ததாக காசியம்மாள் ஒப்புக்கொண்டு இருக்கின்றார்.கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவருடன் சேர்ந்து மேலும், 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
English Summary
MURDER IN CUDDALURE TITTAGUDI