அ.தி.மு.க. தங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் - எம்.பி கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க. முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதால் அவர்கள் முந்திச் செல்வதாக அர்த்தம் இல்லை. எல்லோருக்கும் ஒரே நாளில்தான் தேர்தல் நடக்கப் போகிறது. காங்கிரஸ் - தி.மு.க. இடையே இருப்பது நிலைத்து நிற்கும் உறவு. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. தங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மோடி, இந்தியாவின் பிரதமர். அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்கு வரலாம். அது அவரது உரிமை" என்றுத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp karthik sithambaram press meet in pudukottai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->