காட்டு யானையின் நடமாட்டம்.. தொட்டபெட்டாவில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை! - Seithipunal
Seithipunal


நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்வந்து உதகையின்  அழகை ரசித்து செல்கின்றனர்.
 
தற்போது  உதகை வனப் பகுதியில் வறட்சி நிலவி வருவதால்  விலங்குகள் உணவு தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலவுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் உடனே  நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது. யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்ட யானைக்கு  மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. 

இந்தநிலையில் அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Movement of wild elephant Tourists banned again in Doddabetta


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->