கொள்முதல் செய்யாததால் விரக்தி: தேனி, தேவதானப்பட்டி அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் போராட்டம் ..! - Seithipunal
Seithipunal


தேவதானப்பட்டி அருகே விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று காலை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு இரண்டாம் போக சாகுபடி பணிகள் முடிந்து நெல் அறுவடை பணி நடைபெற்றுள்ளது. இங்கு மேல்மங்கலத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் கடந்த 40 நாட்களாக கொட்டிவைத்து காத்திருந்துள்ளனர்.

ஆனால், குறித்த கொள்முதல் நிலையத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கொள்முதல் நிலைய வளாகத்தில் கொட்டியிருந்த நெல் மணிகள் சேதமடைந்துள்ளதாக கூறி அதை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த விஷசாயிகள் இதை கண்டித்து இன்று காலை நெல்மணிகளை பெரியகுளம் சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers sudden protest near Devadhanapatti after dumping paddy on the road causes a stir


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->