மதுரை: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு
Motorcycle lorry accident in madurai
மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி(68). இவர் மோட்டார் சைக்கிளிலில் கூடல் நகர் ரயில்வே மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென தனுஷ்கோடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த தனுஷ்கோடியை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனுஷ்கோடி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசா,ர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle lorry accident in madurai