துரோகத்தையும் பொறுத்துக் கொண்டு மக்களுக்காக கட்சியை நடத்தி வருகிறேன்...! - வைகோ - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் ''வைகோ'' பங்கேற்று உரையாடினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"நான் உடல்நலம் சரியில்லாமல் 400 கி.மீ தூரம் பயணித்து கட்சி நலன் வேண்டி பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றனர்.

இருப்பினும், நீங்கள் பேசிக் கொண்டும், எழுந்தும் செல்கிறீர்கள். இந்த இயக்கத்தின் ஜீவ நாடியே தொண்டர்கள்தான். தொண்டர்கள் தான் மனித தெய்வங்கள். 31 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இன்றைக்கு இந்த கட்சி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது பொதுக்குழு உறுப்பினர்கள்.கட்சிக்கு அவைத்தலைவராக இருந்து அறக்கட்டளை பெயரில் முறைகேடு செய்து கட்சிக்கு துரோகம் செய்து வந்தவரிடம் தொலைபேசியில் (மல்லை சத்யா) பேசுகிறார்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு என்னை இழிவுப்படுத்தி பதிவு போடுகிறவரிடம் தொலைபேசியில் பேசுகிறார்.இது குறித்து கேட்டால் பேசினேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சக்தியுடன் சேர்ந்துள்ளீர்களோ. இப்போது நமது துணை பொதுச்செயலாளர் இங்கு ஒரு தீர்மானத்தை (மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க) நிறைவேற்றலாம் என்று கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.

துரை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் என்று நான் கூறியபோது நீங்கள் என்ன சர்வாதிகாரியா என கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.அதன் பிறகுதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் 106 வாக்குகளில் 104 வாக்குகளை துரை வைகோ பெற்றார். இந்நிலையில் வாரிசு அரசியல் வேண்டாம் என்று சொன்ன வைகோ இன்று வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என்ற பழி சொல்லுக்கு ஆளாகியுள்ளேன்.

துரோகத்தை தாண்டி கட்சியை காத்து வருகிறேன். கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எனது தாயார் மாரியம்மாள் 1000 பேரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடி வெற்றி பெற்றேன். காவேரி நதிநீர் பிரச்சனைக்காக இயக்கம் தொடங்கி பாடுபட்டேன். மீத்தேன் எரிவாயு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்றேன். தற்போது பா.ஜ.க.வோடு நான் பேசி வருகிறேன்.

எனது மகனுக்கு மந்திரி பதவியை பெற்றுத்தர போகிறேன் என்று பொய் தகவலை பரப்புகிறார்கள். தமிழகத்திற்குள் இந்துத்துவா வரக்கூடாது என கடந்த தேர்தலில் முடிவு செய்தோம். திராவிட இயக்கத்திற்கு உறுதியாக இருந்தோம். இன்றும் அதையே கூறுகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி. செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நீங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am running party people even tolerating betrayal Vaiko


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->