தேர்தல் வியூகம்! விஜயுடன் கூட்டணி குறித்து பளிச்சென்று பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி...!
Election strategy Edappadi Palaniswami gave a brilliant answer about alliance with Vijay
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ''எடப்பாடி பழனிசாமி'' ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக அவர் தெரிவித்தது,"அ.தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் அ.தி.மு.க. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே,த.வெ.க. தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எடப்பாடி பழனிசாமி தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும், விஜய் கூட்டணிக்கு வந்தால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துவிட்டு த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.
English Summary
Election strategy Edappadi Palaniswami gave a brilliant answer about alliance with Vijay