அதிர்ச்சி தகவல்! டிரம்ப் அதிகாரத்தால் இதுவரை 1563 இந்தியர்கள் நாடு கடத்தல்...!
Shocking news 1563 Indians have been deported so far due to Trumps authority
கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.

இந்தியர்கள் கை விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதியிலிருந்து இம்மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை அமெரிக்காவிலிருந்து இதுவரை 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதில் பெரும்பாலானவர்கள் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்தி தொடர்பாளர் ரந்தீஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் இருந்து 15000க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
English Summary
Shocking news 1563 Indians have been deported so far due to Trumps authority