மும்பையில் பயங்கரம்! இடிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டிடம்! 7 பேரின் கதி என்ன?
Mumbai building accident
மும்பை பாந்த்ராவில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்து பெரும் விபத்துக்கு காரணமானது.
கட்டடத்தில் உள்ள வீடுகளில் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால், அந்த பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாக தெரிய வருகிறது. வெடிப்பு மற்றும் இடிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
தகவலறிந்ததும் மீட்புப் படைகள் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று தீவிரமாக சோதனையில் ஈடுபட்டன. இதுவரை 12 பேர் காயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு தகவலின்படி, மேலும் ஏழு பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீயணைப்பு படை, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட்டு வருவதால், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
தற்போது வரை உயிரிழப்பு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.