வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
IMD Alert
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், வரும் ஜூலை 24ஆம் தேதி வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், இந்த அமைப்பு மெதுவாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த வாரங்களில் இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் வங்கக் கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வானிலை மாற்றம், கனமழை, காற்றின் வேகம் போன்றவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.