சென்னையில் பெரும் சோகம்.. மகள்களை காப்பாற்றிய தாய் ரயிலில் சிக்கி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற தனது  மகள்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளி விட்டு காப்பாற்றிய தாய் அதே ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோரில் பொருட்களை வாங்கி கொண்டு கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளார்.

அங்கிருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் செல்வதற்காக மகள்களுடன் தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் வருவதை அவர்களுடைய இரு மகள்களும் கவனிக்காமல் சென்றுள்ளனர். அதனை கண்ட தாய் சித்ரா இரண்டு மகள்களையும் ஓடி சென்று தண்டவாளத்தில் இருந்து தள்ளி விட்டு காப்பற்றியதோடு அதே மின்சார ரயில் கண் இமைக்கும்  மோதியதில் தாய் சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ராவின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகள்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தாய் தன் உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother saved her daughters died after being caught in train


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->