கடன் தொகைக்காக பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த தாய்.. தென்காசியில் சோகம்.!! 
                                    
                                    
                                   Mother sales her childhood baby due to loan problem 
 
                                 
                               
                                
                                      
                                            நெல்லையில் தனது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரோஸி. 
இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் சொந்த ஊரான வீரவநல்லூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி பிரிந்துள்ளனர். 
மனைவி மற்றும் குழந்தையை பார்க்க மூன்று மாதங்களுக்குப் பிறகு கணபதி சென்றுள்ளார். ரோஸியிடம் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ந்த அவர் விசாரணை செய்ததில், ரோஸி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், குழந்தையை கடத்தி சென்றதாக கூறியதால் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 
இதில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் ரோஸியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வறுமை காரணமாக உறவினர் சுரேஷ் மூலமாக பள்ளக்கால் புதுக்குடியை சார்ந்த குமார் என்பவரிடம் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. 
மேலும், குழந்தை பலரிடம் கைமாறி சென்னைக்கு சென்றதையும் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். தற்போது குழந்தையை மீட்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் ரோஸி, குமார் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Mother sales her childhood baby due to loan problem