ஆரணி அருகே பரபரப்பு.! 2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாயின் கள்ளக்காதலன்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து ஜெயசுதா கருவுற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயசுதா கணவரை பிரிந்து தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தில் வசித்து வந்தார். பின்பு ஜெயசுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, குழந்தை ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். 

அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இதனால் மாணிக்கம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தகராறு செய்து வந்துள்ளார். மேலும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother illegal lover who brutally killed a 2 years old child in Arani near


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->