கடைசிவரை ஜாலியா இருக்கலாம்.. கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்.. தந்தைக்கு நேர்ந்த கொடுமை.!
Mother, daughter killed Father in tuticorin
கள்ளக்காதலன், மகள் மற்றும் மனைவி என மூவரும் இணைந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அடுத்த அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இதில் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தினமும் இரவில் தூத்துக்குடிக்கு சென்று மினி வேனில் மீன் வாங்கிக் கொண்டு மறுநாள் காலையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மனைவி ராணி கருப்பசாமி என்பவர் உடன் தகாத உறவில் இருந்து உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டிலேயே அடிக்கடி உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கள்ளக்காதலன் கருப்பசாமி ராணியின் மகளையும் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர் கடைசி வரை தனது கள்ளக்காதல் உறவுக்கு வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி அவருக்கே தனது மகளை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என எண்ணியுள்ளார்.
இதனையடுத்து கணவன் ஞானசேகருக்கு இந்த சம்பவம் எல்லாம் தெரிய வர மனைவி மற்றும் மகள் இருவரையும் கண்டித்து தாக்கியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த ராணி கணவனை கொன்றால் தான் நாம் அனைவரும் ஜாலியாக இருக்க முடியும் என்று தனது மகளையும் ஒத்துழைக்க வைத்துள்ளார். அதன்படி நள்ளிரவில் ஞானசேகரன் தூங்கியவுடன் கருப்பசாமியை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த ஞானசேகரின் வாயை பொத்தி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.
English Summary
Mother, daughter killed Father in tuticorin