மகள் காதலனுடன் சென்ற தருணம்...பெற்றோர் மனம் உடைந்து எடுத்த கடைசி முடிவு...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி அருகிலுள்ள நாகர்பாளையம் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த மாதேஷ்வரன் (45) அச்சக வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சந்திரா (40) அத்தாணி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு சோனா என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

இதில் சோனா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் சேலம் பகுதியை சேர்ந்த தாமோதரனும் வேலை செய்துவந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக வளர்ந்தது.

இந்த உறவு குறித்து அறிந்த பெற்றோர், மகளின் காதலை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், தற்கொலை செய்வோம் என மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், தன் காதலில் உறுதியுடன் இருந்த சோனா, நேற்று காலை தாமோதரன் வீட்டிற்கு வந்தபோது, அவருடன் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.மேலும், மகள் கண்முன்னே காதலனுடன் வெளியேறிய சம்பவம் பெற்றோருக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.

“இவ்வாழ்க்கையை விட இறப்பே மேல்” என்ற விரக்தியில், மாதேஷ்வரனும் சந்திராவும் விஷம் அருந்தி வீட்டில் மயங்கிக் கிடந்தனர்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

moment daughter went her boyfriend parents heartbroken final decision What happened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->