நவீன வசதியுடன் கூடிய தூய்மையான கழிவறை..!! சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


சென்னை முழுவதும் மக்களுக்கு கட்டணமில்லா தூய்மையான கழிவறை என்ற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி செயல்பட தொடங்கியுள்ளது. சீர்மிகு சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொது மக்களுக்கு கட்டணம் இல்லாத தூய்மையான கழிவறை அமைக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. பொது கழிவறை என்றாலே அசுத்தம் என்ற பொது எண்ணத்தை மாற்றி அமைக்கும் நோக்கில் மக்களிடையே பொது கழிவறை பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக பொதுமக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து முதற்கட்டமாக 9 பொது கழிப்பறைகளை நவீன வசதியுடன் மேம்படுத்தியுள்ளனர். இந்த கழிவறைகளில் வெளிச்சவற்றில் ஓவியங்கள், பெண்களுக்கான சானிட்டரின் நாப்கின் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சென்று வர சாய்தள பாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் என மேம்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த கழிவறைகளின் தரம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் அலாரம் பொத்தான்கள் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கழிவறையின் தூய்மை தன்மை குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் 63 கோடி ரூபாய் செலவில் 500 கழிவறைகள் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ஸ்மார்ட் கழிவறைகளை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அமையும் பொது கழிவறைகளை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்ற நிலையை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modern clean toilet facilities in Chennai 2.0 project


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->