கமலை பின்னுக்குத் தள்ளிய விஜய்! நூறு விழுக்காடு தோல்வியடைந்த மய்யம்.! - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் 100 விழுக்காடு தோல்வியை சந்தித்து உள்ளது.

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரங்களின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை உருவாக்கப்போவதாக கூறி வந்தார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சிக்கு நன்கொடை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் நூறு விழுக்காடு தோல்வியை சந்தித்து உள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் என ஐந்து இடங்களில், வெற்றி பெற்றுள்ளது.

விஜய் நேரடி அரசியலுக்கு வராத நிலையில் அவரது ரசிகர்கள் வேட்பாளர்களாக களம் கண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், தேர்தல் நேரத்திலும் மக்களோடு மக்களாக வந்திருந்து தேர்தலை சந்திக்காதது மய்யத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Lost all places


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->