மகளிர் கட்டமில்லா பேருந்து பயணம் இனி "விடியல் பயணம்".! முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!
MKStalin announced Women free bus scheme name changed as vidiyal payanam
இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியை ஏற்றிய பிறகு பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் "தமிழக அரசின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் இதுவரை 314 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு தரப்பட்ட மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.850 மேல் மகளிரால் சேமிக்க முடிகிறது. எனவே மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்திற்கு இனி "விடியல் பயணம்" என்று பெயர் சூட்டப்படும்" என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
English Summary
MKStalin announced Women free bus scheme name changed as vidiyal payanam