பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் - பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்த நிலையில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாண்டுகளுக்கு பிறகு தற்போது தொற்று பரவல் குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் தற்போது பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலைமைசெயலகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது,

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இது வரை 91 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் மக்களை கேட்டு கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin sayings at Consultative meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->